எங்களைப் பற்றி — About TVK
எங்கள் இயக்கம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி (Tamilaga Vazhvurimai Katchi — TVK) என்பது சாதி, மத, மொழி பாகுபாடின்றி அனைத்து மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் அரசியல் இயக்கம். சமூக நீதி, பொருளாதார சமத்துவம், மற்றும் தமிழர் அடையாளத்தை பாதுகாத்தல் ஆகியவை எங்கள் அடிப்படை கொள்கைகள்.
எங்கள் லட்சியம்
- ஒவ்வொரு தமிழரின் அடிப்படை வாழ்வுரிமையை உறுதி செய்தல்.
- கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் சமத்துவம்.
- அரசியல் ஊழலுக்கு எதிரான போராட்டம்.
- பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்களின் உரிமைகள்.
எங்கள் செயல்பாடுகள்
மாநிலம் முழுவதும் மாவட்டம், தொகுதி அளவில் அமைப்பு. மக்கள் தொடர்பு நிகழ்வுகள், போராட்டங்கள், சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி, மேகதாது தடுப்புக்கான சட்டப்போராட்டங்கள் என தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
தலைமை மற்றும் நிர்வாகம்
எங்கள் தலைவர்கள் மற்றும் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பற்றிய முழு விவரம் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பக்கங்களில் உள்ளது.
உறுப்பினராக இணையுங்கள்
இயக்கத்தில் இணைய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை நிரப்பவும். தொடர்புக்கு தொடர்பு பக்கத்தை பார்க்கவும்.
— ஆசிரியர் குழு, TVK Digital Team